- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார். குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில், 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏற வந்த அமைச்சரை சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், அரசுத் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.