"எல்லோருக்கும் ஒரே Chairஆ..? அண்ணன் ஆ.ராசா-வுக்கு ஏன் பொதுத்தொகுதி இல்லை..?" - கேள்விக்கணைகளை தொடுத்த வினோஜ்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ்.பி.செல்வம், ஐசிஎஃப், யுனைட்டெட் இந்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், திமுகவில் சமூக நீதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியதோடு, சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் விமர்சித்தார். மேலும், ஊழல்வாதிகளுக்கு பிரதமர் மோடி சர்வாதிகாரியாக இருப்பதாவும் தெரிவித்தார்.