கிளாம்பாக்கமா..? கேளம்பாக்கமா..? பேரவையில் கன்ஃப்யூஸான செல்லூர் ராஜு

Update: 2024-02-13 11:42 GMT

கிளாம்பாக்கமா..? கேளம்பாக்கமா..? பேரவையில் கன்ஃப்யூஷான செல்லூர் ராஜு

சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். தென்மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னைக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்றும், அதிகாலையில் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் அவர் புகார் கூறினார். அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தவறுதலாக கேளம்பாக்கம் என செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அது கேளம்பாக்கம் அல்ல.... கிளாம்பாக்கம் எனக் கூறினார். தங்களுக்கும் தெளிவு வர வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், அமைச்சர் சிவசங்கர் கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்