பெரியார் சிலை உடைப்பு கருத்து, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் உள்ளிட்ட வழக்குகளில் எச். ராஜா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாங்கள் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.