சனாதான விவகாரத்தில் இந்தியா கூட்டணியில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிப்பதை, பாஜக விமர்சித்து வரும் நிலையில், அடுத்த மாதம் விசிக நடத்தும் மாநாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, விசிக தலைவர் திருமாவளவன், கேக் வெட்டி கட்சி தொண்டர்களுக்கு வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திருமாவளவன், காங்கிரஸ் பக்கம் பொதுமக்கள் அணி திரள்கிறார்கள் என்றார்.