ஃபோர்ஸ் அர்பேனியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்! தவெக தலைவர் பிரசார வாகனத்தின் ரகசியம்
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் பயன்படுத்திய பிரசார வாகனம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..
முதல் முறையாக பிரசார வாகனத்தில் பயணம் செய்த விஜய்
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவித்து, 2026-தான் எங்க இலக்கு என்று அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் விஜய், அரசியல் கட்சி தலைவராக முதல் முறையாக
களத்திற்கு வந்து மக்களை சந்தித்தார்.
முன்பக்கம் த.வெ.க. கொடிப்பறக்க, பரந்தூருக்கு விஜய் பறந்த வாகனம் தனிக்கவனம் பெற்றது.
விஜய் பயணம் செய்தது ஃபோர்ஸ் அர்பேனியா. (Force Urbania)... சொகுசாக குடும்ப சுற்றுலா ப்ளானுக்காக உருவாக்கப்பட்ட வாகனம். இந்தியாவில் பெரும்பாலும் பிரசார வாகனமாக பயன்படுத்தப்படுகிறது
இப்போது விஜயின் பிரசார வாகனமாகவும் வலம் வர தொடங்கிவிட்டது. ஆம்... விஜயின் 2026 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக வாங்கப்பட்டிருக்கிறது Force Urbania சொகுசு கேரவன் வாகனம்.
பிரசாரத்திற்கு வாங்கிய வாகனத்தில் பரந்தூர் சென்ற விஜய், வாகனத்தில் நின்றவாறு மக்களிடம் பேசவும் செய்தார்.
10, 13, 17 சீட்கள் என 3 வகைகளில் இந்த ரக சொகுசு வாகனங்கள் உள்ளன. உயரமான ரூஃப் இருப்பதால், வாகனத்திற்கு உள்ளே தலை தட்டாது.
கேரவனை நமக்கு எப்படி வேண்டுமோ அதற்கு ஏற்றப்படி மாற்றிக் கொள்ளலாம். Anti Lock Brake System, Sensor, Electronic Brakeforce என பல டெக்னாலஜி வசதிகளை கொண்ட இந்த சொகுசு வாகனத்தின் விலை 29.83 லட்சம் ரூபாய்.
ஒரு ஜிம்பாடி காளையை பார்த்து இன்ஸ்பயர் ஆனதால் வடிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனம், சாலையில் அலுங்காமல்... குலுங்காமல் சொகுசு கப்பலாக ஜம்முனு
செல்லும்...
இதே காரை பிளாக் கலரில் எங்கேயோ பார்த்து இருக்கிறோம் என்று நீங்கள் யோசித்தால், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக இதே ரக காரைதான் பயன்படுத்தியிருந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், பல கட்சிகளும் வாங்க ஆர்வம் காட்டும் வண்டியாக இருக்கும் ஃபோர்ஸ் அர்பேனியாவை பிரசார களத்தில் அதிகம் பார்க்கலாம் என்றே தெரிகிறது.