அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - தீர்ப்பை தள்ளிவைத்த ஐகோர்ட்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001 வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002-ல் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து, வேலூர் நீதிமன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்ட அமைச்சர் துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர்கள், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகைகள் குறித்து விளக்கினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.