அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில்..காவி உடையணிந்த திருவள்ளுவர்..அரசியலில் வெடித்து புதிய சர்ச்சை

Update: 2024-05-06 02:49 GMT

டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசு 50 ஆண்டுகளுக்கு மேலாக, வெள்ளை உடை அணிந்திருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தையே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில், பாஜக தலைவர்கள் சிலர் அவ்வபோது காவி உடையணிந்த திருவள்ளுவரை பயன்படுத்தி, அவரை சனாதனவாதி என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த சூழலில்தான், டெல்லிவாழ் தமிழர்கள் பங்கேற்கும் பாஜக பிரச்சார கூட்டத்தில், காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்