``சமூக நீதி அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல; மொழியை வைத்து பிரிவினை..'' - ஆளுநர் பரபரப்பு பேச்சு

Update: 2024-11-26 16:18 GMT

தேசிய சட்ட தினத்தையொட்டி சிம்போசியம் நிகழ்ச்சி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, செய்தித்தாள்களில் சமூகநீதி குறித்த செய்திகள் வருகிறது, ஆனால் குடிநீர் தொட்டியில் ஒரு சமுதாயத்தினர் அறுவறுக்கத்தக்க செயலை செய்துள்ளனர் என்று விமர்சித்தார். இன்னும் சமூகநீதி தீண்டாமை உள்ளது என குற்றம் சாட்டியவர், சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு சொந்தமானது இல்லை எனவும் அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை எனவும் குறிப்பிட்டார். மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது, மொழியை வைத்து பிரிவினையில் ஈடுபடுகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்

Tags:    

மேலும் செய்திகள்