பேரனுக்காக மகனிடம் நேருக்கு நேர்..அத்தனை பேர் முன்னிலையிலும் சட்டென முகத்தை காட்டிய அன்புமணி..

Update: 2024-12-28 13:19 GMT

புதுச்சேரி மாநிலம் பட்டானூரில் பாமக சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தன் என்பவரை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். அப்போது, அன்புமணி கையில் வைத்திருந்த மைக்கை தூக்கி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தார். கட்சிக்கு வந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும் என்றும், கட்சியை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சியா என்றும் கேள்வி எழுப்பினர். அப்போது கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான், முடிவை நான் தான் எடுப்பேன் என, ராமதாஸ் கூறினார். விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்றும் காட்டமாக தெரிவித்தார். இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்