கொந்தளித்து ஈபிஎஸ் போட்ட ட்வீட் | AIADMK | EPS | TWEET

Update: 2024-11-07 02:37 GMT

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி.பழனிசாமி, திமுக அரசின் மீது, தனது எக்ஸ் தள பக்கத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தான் பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசின் நடவடிக்கை மெத்தனமாக இருந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அரசின் மெத்தனம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, யாத்திகா என்ற 6 வயது சிறுமி காய்ச்சலுக்கு பலியாகியுள்ள சம்பவம், தனக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என்று, இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்