‛மாப்பிள்ளை' செந்தில் பாலாஜி.. Sorry.. Sorry'' - அதிமுக MLAவால் சட்டசபையில் சிரிப்பலை
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன் தனது தொகுதியில் மின்வாரியம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜியை திடீரென மாப்பிள்ளை என கூறினார். அப்போது பேரவையில் சிரிப்பலை ஏற்பட்ட நிலையில், பழக்கதோஷத்தில் வந்துவிட்டது, என சமாளித்தார்.