RB உதயகுமாரை சுத்துப்போட்ட கும்பல்.. தாக்க முயற்சி.. பறந்து வந்த 108.. மதுரையில் பதற்றம்

Update: 2024-11-11 02:29 GMT

உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அமமுக நிர்வாகிகள் சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டம் முடிந்து திருமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மங்கல்ரேவு பகுதியில் வழிமறித்த அமமுக நிர்வாகிகள் சிலர் , தங்கள் கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக கூறி ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அமமுக நிர்வாகிகள் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயன்றதாகவும், உடன் கார்களில் வந்தவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வந்த அபினேஷ், விஷ்ணு ஆகியோரும் காயமடைந்தனர். அவர்களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக

போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்