வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்.. கழுத்தளவு தண்ணீரிலும் கைவிடாத `108' - ஓடோடி வந்த ஆபத்பாந்தவன்
மிக் ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடான நிலையில் சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் 109 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் மட்டும் 264 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 500க்கும் மேற்பட்ட ஊழியர்களும் மழைக் கால அவசர சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மழை நீரில் தத்தளித்தபடி சென்றாவது அவசர தேவை இருப்பவர்களை அணைத்துக் கொண்டது 108 ஆம்புலன்ஸ் சேவை... புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஆம்புலன்ஸ்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன... கழுத்தளவு நீரிலும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர்கள் சாதுரியமாக செயல்பட்டு டிரம்கள், பைபர் ஸ்ட்ரக்சர்களை இணைத்து மிதவை படகை உருவாக்கி நோயாளிகல் மீட்கப்பட்டனர்... 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் செயலுக்கு சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.