வட்டிக்கு மேல் வட்டி கேட்டு தம்பதியை தாக்கிய நபர்
பழனியில் பரபரப்பு
#palani #money #thanthitv
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வில்வாதம் பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி காளியம்மாள் குடும்ப கஷ்டத்திற்காக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். 500 ரூபாய் வட்டி போக நான்காயிரத்து ஐநூறு ரூபாய் கையில் கொடுத்த அவர், பத்து நாட்களுக்கு 500 ரூபாய் வட்டி வீதம் பணம் வேண்டும் என தெரிவித்துள்ளார். வட்டியும் அசலும் சேர்த்து 5 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தநிலையில், மேலும் 500 ரூபாய் வட்டி வேண்டும் என ராஜேந்திரன் மிரட்டி உள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால் காளியம்மாள் மற்றும் அவரது கணவர் மகேந்திரனை ஆபாச வார்த்தைகளால் தாக்கி உள்ளார். காயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில், கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.