நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் 988 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் சந்தை மதிப்பு தற்போது 5 ஆயிரம் கோடி என்றும் குற்றப்பத்திரிக்கையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது...