இலங்கையில் இன்று 76வது சுதந்திர தின கொண்டாட்டம்

Update: 2024-02-04 02:29 GMT

இலங்கையின் 76-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கை சென்றுள்ளார். இதை முன்னிட்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து இருவர் முன்னிலையில் இலங்கை - தாய்லாந்து நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு சுதந்திரமில்லாத நாளாக பிரகடனப்படுத்தி, இன்று பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்