இந்தியா - இலங்கை இடையேயான உறவு - அதிபர் ரணில் விக்ரமசிங்க சொன்ன தகவல்

Update: 2024-01-18 11:02 GMT

இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து சுவிட்சர்லாந்தில் நடத்திய வட்டமேசை கலந்துரையாடலில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அதிக திறன் கொண்ட இருதரப்பு மின்சார இணைப்பை ஏற்படுத்துவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் கூறினார். இந்தியா - இலங்கை இடையே வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க அப்போது குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்