பம்பையில் இருந்து கிளாம்பாக்கம் வந்த முதல் பேருந்து - பக்தர்கள் மனசு சொன்னது என்ன?
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட தமிழக அரசின் சிறப்பு பேருந்து முதல்முறையாக கிளாம்பாக்கம் வந்தடைந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் கோயம்பேடு, கிளாம்பாக்கத்திலிருந்து பம்பைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், முதல்முறையாக பம்பையில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் பயணித்த பக்தர்கள் நிலக்கல் செல்லாமல், நேரடியாக பம்பை செல்வது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தனர்.