பிரதமர் மோடியின் உடைமைகளை சோதிப்பீர்களா? - தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி

Update: 2024-11-12 07:51 GMT

மகாராஷ்டிராவில் தனது உடைமைகளை பரிசோதனையிட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இதேபோல் பிரதமர் மோடியின் உடைமைகளை பரிசோதிப்பீர்களா என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

யாவத்மால் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற உத்தவ் தாக்கரேவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் அவரது உடமைகளை பரிசோதனை செய்ய சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இதுபோல பிரதமர் மோடி, அமித்ஷா, ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பேக்குகளில் சோதனையிடுவீர்களா என கேள்வியை எழுப்பியுள்ளார். தேர்தல் அதிகாரிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்குமாறு தனது தொண்டர்களிடமும் கேட்டு கொண்டுள்ளார். இது ஜனநாயகமாக இருக்க முடியாது என விமர்சனம் செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, ஜனநாயகத்தில் பெரியவர், சிறியவர் எல்லாம் கிடையாது என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்