பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாப்ட் CEO - ஏன் தெரியுமா?

Update: 2025-01-08 02:39 GMT

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்தியா நாதெள்ளா புது டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தகவல் தொழில்நுட்பம், புத்தாக்கம், செய்ற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் பற்றி உரையாடினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் விரிவுபடுத்த பிரதமர் மோடி எடுத்து வரும் முன்னெடுப்புகளுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிய முதலீடுகள் மற்றும் விரிவாக்க திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்