#Breaking : நாடே எதிர்பார்த்த... ஸ்பேடெக்ஸ் மிஷன்... டாக்கிங் திடீர் நிறுத்தம் - ISRO வெளியிட்ட அறிவிப்பு

x

விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் என்ற தொழில்நுட்பத்தை சோதனை செய்வதற்காக, இஸ்ரோ ஸ்பேடெக்ஸ் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்காக 2 விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைகளை வெற்றிகரமாக முடிக்க பலகட்ட சோதனைகள் தேவைப்படுவதன் காரணமாக, ஸ்பேஸ் டாக்கிங் முயற்சி ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில் இஸ்ரோ அறிவித்தபடி, ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனைத் திட்டம் நாளை நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்