1,500 ஆண்டுகால பிரம்மாண்ட பொக்கிஷம்... உலகை வியக்க வைத்த அதிசய கண்டுபிடிப்பு
பெரு நாட்டில், ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல் ஓவியத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
ட்ரூஜிலோவில் அருகே உள்ள வாலே டி விரு பகுதியில் ட்ரோன் பறந்தபோது, ஏதேச்சையாக இந்த பிரம்மாண்ட பறவை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த பறவை ஓவியம் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. மேலும், அங்கு கல் கிணறுகள், பழமையான பீங்கான் ஓடுகள் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.