நினைத்து பார்க்க முடியாத நீட் முறைகேடு.. துருவ துருவ பகீர் மோசடி.. நாடே அதிர்ச்சியில்

Update: 2024-06-24 02:46 GMT

நினைத்து பார்க்க முடியாத நீட் முறைகேடு.. துருவ துருவ பகீர் மோசடி.. நாடே அதிர்ச்சியில்

நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வில் 63 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட 12 பேர் 3 ஆண்டுகளும், 9 பேர் இரண்டு ஆண்டுகளும், இரண்டு பேர் ஓராண்டும் தேர்வு எழுத முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் மோசடி தொடர்பான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக பீகாரைச் சேர்ந்த 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கோத்ராவில் உள்ள மையங்களில் இருந்து 30 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்