மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க.,
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து100 ரூபாய் வழங்கப்படும், 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக வருகி 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பையில் செய்தியாளர்கள் மத்தியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே, மும்பை பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் ஷெலர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்படும் - 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அமைத்த 100 நாட்களில் டெக்னாலஜியை மேம்படுத்த விஷன் ஆவணம் அறிமுகம் செய்யப்படும் - மேக் இன் இந்தியாவின் திட்டத்தில் முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக மகராஷ்டிரா மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.