மணிப்பூர் விவகாரம்.. பாஜக தலையில் இடியை இறக்கிய சேதி | Manippur | BJP | PM Modi | Amit Shah | ThanthiTV
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
மணிப்பூரில் மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சார பணிகளை ரத்து செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவசரமாக டெல்லிக்கு சென்றார். அங்கு, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, தற்போது உள்ள நிலை, எடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வன்முறையால் ஏற்பட்ட சேதங்கள், மீண்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், இரண்டாவது நாளாகவும் விரிவான ஆலோசனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்த உள்ளார்.