கொல்கத்தா டாக்டர் பலாத்கார கொலை.. களைய களைய பகீர் உண்மைகள்.. காலேஜ் Ex டீன் கைது
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன்பேரில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ போலீசார் பல கட்ட விசாரணைகளை நடத்தி வந்தனர். மேலும் அவருக்கு தொடர்புடைய 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையும் நடைபெற்றது. இந்நிலையில் சந்தீப் கோஷ், அவரது கூடுதல் பாதுகாவலர் அஃப்ஸர் அலி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.