பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் சபரிமலை - தேவஸ்தானம் எடுத்த முடிவு
சபரிமலையில் மண்டல பூஜை காலம் நிறைவடையவுள்ள நிலையில், ஒரேநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பக்தர்கள் குவிந்த நிலையில், இன்றும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை முடிந்து மீண்டும் 30-ஆம் தேதி நடைதிறக்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.