ஊருக்கு ஒதுக்கு புறமாக காட்டுக்குள் அலறி துடித்த சிறுமி - மிரண்டு போன மக்கள்.. அதிர்ச்சி வீடியோ

Update: 2024-09-11 01:44 GMT

கர்நாடகாவின் ராம் நகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இரவு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது 5 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயிருக்கிறார். இந்நிலையில், பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், குழந்தையை தான் கடத்தியிருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். உடனே, சிறுமியை தேட ஆரம்பித்த உறவினர்கள், ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் டேப்பால் வாய் அடைக்கப்பட்டும், கயிறால் கைகள் கட்டப்பட்டும் இருந்த சிறுமியை மீட்டிருக்கின்றனர். விசாரணையில், பகக்த்து வீட்டுக்காரரான தர்ஷ் என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. மதுபானம் மற்றும் புகையிலை பொருள்கள் வாங்க பணமில்லாததால் சிறுமியை கடத்தியதாக கூறிய அவரை பொதுமக்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். தொடர்ந்து, இளைஞரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்