இஸ்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்... யார் இந்த வி.நாராயணன்?

Update: 2025-01-08 02:26 GMT

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது. கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன், திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள L.P.S.C எனப்படும் திரவ உந்துவிசை அமைப்புகளின் மையத்தின் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3 , கிரையோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். வரும் 14ம் தேதி இஸ்ரோவின் தலைவராக பதவியேற்கும் வி.நாராயணன், 2 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்