சென்னையில் முதல் டெஸ்ட்..IND vs BAN - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2024-09-08 04:05 GMT

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை ஆன்லைனில் தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இதற்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்