தலைநகரை அதிர வைத்த சம்பவம்...பால் பவுடரில் பயணி பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் - பரபரப்பு காட்சி
டெல்லி விமான நிலையத்தில் பால் பவுடர் டப்பாவில் கடத்தப்பட்ட 408 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரியாத்திலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலில், சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்து 4 தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர். அவர் வைத்திருந்த பால் பவுடர் டப்பாவுக்குள் இருந்து 2 தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.