டெல்லியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 24 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைநகர் டெல்லியில் கிரிஷன் விஹார் ஆர்டி பப்ளிக் பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், ஒரு வீட்டின் மேல் தளம் மற்றும் கீழ் தளத்தில் உள்ள பாதி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த 24 வயது பெண் ரஜ்னி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ரேணு என்ற மற்றொரு பெண்ணுக்கு 18 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் இறங்கினர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.