தமிழகத்தில் வெடித்த புது பிரச்சனை - மத்திய அரசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்

Update: 2024-11-08 04:02 GMT

தமிழகத்தில் போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வரும் விவகாரத்தில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, இ-ஃபார்மசி செயலிகள் வாயிலாக, தமிழகத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஆன்லைன் வழியாக போதை மாத்திரை விற்கும் நிறுவனங்களின் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்