இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
சாம்சங் தொழிலாளர்கள் கைது - பரபரப்பு
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் இன்று அதிரடி கைது...
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 2 தொழிலாளர்கள் 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு...
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி போராட்டத்தை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி...
தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு
கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக தலைவர்கள் ஆதரவு...
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமானது அல்ல என்றும் கருத்து...
பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...
"அனைத்து கோரிக்கைகளும் ஏற்பு"
சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று விளக்கம்...
சாம்சங் நிறுவனம் குஜராத்துக்கு செல்வதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு...
மாநிலக் கல்லூரி மாணவர் மரணம்
ரூட் தல விவகாரத்தில் தாக்கப்பட்ட, சென்னை மாநில கல்லூரி மாணவர் 6 நாட்களுக்கு பின் இன்று உயிரிழப்பு...
கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
குறைந்த விலையில் தக்காளி விற்பனை
சென்னையில் மீண்டும் சதம் விளாசிய தக்காளி விலை...
பண்ணை பசுமை கடைகளில், குறைந்த விலைக்கு வெங்காயம், தக்காளி விற்பனை இன்று தொடக்கம்...
ஒரு வாரத்தில் விலை குறையும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி...
குரூப்-4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932ஆக அதிகரிப்பு...
கூடுதலாக 2 ஆயிரத்து 208 இடங்களை இணைத்து டிஎன்பிஎஸ்சி இன்று அறிவிப்பு...
"பூங்கா கட்டணத்தை குறையுங்கள்"
சென்னை கதீட்ரல் சாலையில், திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு மக்கள் வரவேற்பு...
நுழைவு கட்டணத்தை குறைக்கவும், பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை..