இன்றைய தலைப்பு செய்திகள் (09-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-09 13:53 GMT

சாம்சங் தொழிலாளர்கள் குண்டுக்கட்டாக கைது

கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் 616 பேர் கைது...

சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோரையும் குண்டுக்கட்டாக தூக்கியது காவல்துறை...

தொழிலாளர்களுடன் திமுக கூட்டணி கட்சி சந்திப்பு

கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் மண்டபத்தில் தங்க வைப்பு...

திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு...

"உடனடியாக விடுவிக்க வேண்டும்"

தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி...

தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது எனவும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து....

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைப்பது ஏன்?....

பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என, அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.....

"அனைத்து கோரிக்கைகளும் ஏற்பு"

சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

போராட்டத்தை கைவிட அரசு வலியுறுத்தல்

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார்......

ஊழியர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்...

"தொழிலாளர்கள் போராட்டத்தை தொடரலாம்"

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடரலாம்...

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்