இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-29 13:58 GMT

"தலித் பிரிவினர் தலைமைப்பதவி - காங். விரும்பியதில்லை"

தலித், பழங்குடியினர், ஓ.பி.சி. பிரிவினர் தலைமைப் பதவிக்கு வருவதை, காங்கிரஸ் ஒரு போதும் விரும்பியதில்லை...

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்...

"மத்திய அரசு நிர்வாகத்தில் 3 ஓ.பி.சி.யினர் மட்டுமே"

மத்திய அரசு நிர்வாகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே ஓ.பி.சி. பிரிவினர்...

நிதித்துறையில் ஓ.பி.சி. சமூகத்தினர் ஒருவர் கூட இல்லை என்றும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

"தாலியை அடகு வைக்க வேண்டிய நிலை வராது"

காங்கிரஸ் தேர்தல் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி...

இனி, எந்த பெண்ணும் சிகிச்சைக்காக தாலியை அடகு வைக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் உறுதி...

ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா? அமித்ஷா கருத்து

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமர்...

சரத்பவார், மம்தா பானர்ஜிக்கு பின்னர், மிச்சம் இருந்தால் ராகுல்காந்தி பிரதமராக இருப்பார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்...

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித்ஷா

பீகாரில், மத்திய அமைச்சர் அமித்ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு...

விபத்தில் இருந்து தப்பினார் அமித்ஷா....

"இ.வி.எம். அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு"

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம், தி.மு.க. தரப்பில் மனு..

Tags:    

மேலும் செய்திகள்