டயமண்ட் லீக் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டி...வெறும் 1 சென்டி மீட்டரில் நழுவிய முதலிடம்..

Update: 2024-09-15 10:39 GMT

டயமண்ட் லீக் ஃபைனலில் ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெறும் ஒரு சென்ட்டி மீட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டார்... இது பற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் டயமண்ட் லீக் தடகள தொடரின் ஃபைனல்ஸ்...

ஈட்டியெறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிரீனாடாவின் ஆன்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் கண்டனர்.

போட்டி ஆரம்பம் ஆக, இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 86 புள்ளி 82 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்தார்.

அடுத்தடுத்த முயற்சிகளில் நீரஜ் மற்றும் ஆன்டர்சன் இருவருமே தங்களின் முந்தைய முயற்சிகளைக் காட்டிலும் குறைவான தூரமே வீசினர்.

போட்டியின் முடிவில் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடிக்க,

ஆன்டர்சன் பீட்டர்ஸ் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். ஜூலியன் வெபர் 3ம் இடம் பிடித்தார்.

முதலிடம் பிடித்த ஆன்டர்சன் பீட்டர்ஸுக்கும் நீரஜ் சோப்ராவிற்கும் வித்தியாசம் பூஜ்யம் புள்ளி பூஜ்யம் ஒன்று மீட்டர் தூரம்தான்... அதாவது ஒரு சென்ட்டி மீட்டர்....

வெறும் 1 சென்ட்டி மீட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டுள்ளார் நீரஜ் சோப்ரா...

பார்வையில் 1 சென்ட்டி மீட்டர் தூரம் குறைவாகத் தோன்றினாலும் அந்தக் குறைவான தூரம்தான் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறது.

சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் 2ம் இடம் பிடித்த நீரஜ் சோப்ரா, தற்போது டயமண்ட் லீக்கிலும் 2வது இடத்துடன் சீசனை முடித்துள்ளார்.

அடுத்த சீசனில் நீரஜ் மீட்சி கண்டு முன்புபோல் முதலிடத்தில் வலம் வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு....

Tags:    

மேலும் செய்திகள்