அமரன் திரைப்படம் பற்றி இயக்குனர் கோபி நயினார், எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக கூறினார். ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்வதை கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார் என சிலாகித்து பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை எனவும், குழந்தையின் மரணமும், அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்து என கூறியுள்ளார். அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது, லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என கூறியுள்ளார்.