"கெட்டிமேளம் கொட்டுற கல்யாணம்" - பிரம்மாண்டமாக நடக்கப்போகும் நாக சைதன்யா, சோபிதா திருமணம்
- நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று இரவு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது...
- நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார்.
- இருவருக்கும் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு எளிமையாக நடந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிறகு ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருக்கும் நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு இருவரும் இரவு 8:13 மணி அளவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்... இந்தத் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் செலவில் நடத்த நாகார்ஜுனா திட்டமிட்டிருக்கிறாராம். மேலும் இந்தத் திருமணத்தில் ஷாருக்கான், அமிதாப் பச்சன், அமீர் கான், ராஜமௌலி , அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, ராம்சரண் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரை நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்...