கண்கலங்கிய சுந்தர்.C - எவ்வளவு ஜாலியான மனுசன்.. இப்படி சொல்லிட்டாரே..

Update: 2025-01-16 05:29 GMT

மதகஜ ராஜா படத்தின் வெற்றியை பார்த்து இரண்டு நாட்களாக கண்கலங்கியதாக இயக்குநர் சுந்தர் சி நெகிந்துள்ளார். தயாராகி 12 வருடங்களுக்கு பின்னர் பொங்கலுக்கு வெளியான மதகஜராஜா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் உள்ள தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு பேசிய படத்தின் இயக்குநர் சுந்தர். சி, 30 வருடங்களுக்கு முன் இதே பொங்கல் நாளில் 'உள்ளத்தை அள்ளித்தா' படம் மூலம் ரசிகர்கள் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக நினைவு கூர்ந்தார். தற்போது, மதகஜ ராஜாவை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதாகவும் சுந்தர் சி நெகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்