1984இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் டி.ஆர் திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த சிம்பு
1984 ஆம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, தன் திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்...
லிட்டில் சூப்பர் ஸ்டார் முதல் ஆத்மன் வரையிலான
சிலம்பரசன் டி.ஆரின் 40 ஆண்டு கால திரை பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்...
கிட்டதட்ட 15 வருடங்களுக்கு முன்பே, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சிலம்பரன் என டைடில் கார்டில் தன்னுடைய பெயரை குறிப்பிட்டு தன் பன்முக திறமையால் ரசிகர்களை குதூகலப்படுத்தி இருந்தார் சிம்பு....
தலையில் கர்சிப் கட்டி, கழுத்தில் செயின்.. மற்றும் கையில் பேண்டுடன் திரையில் தோன்றிய விண்டேஜ் சிம்பு.. தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் மறந்து விட முடியாது...
நடுவில் ஒரு ஸ்மால் பிரேக்குக்கு பிறகு மாநாடு திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த சிம்புவை, அவரின் 49 ஆவது திரைப்படத்தில் மீண்டும் விண்டேஜ் லுக்கில் “ஓ மை கடவுளே“ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருவது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது...
இதனிடையே, மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் சேர்ந்து தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்து வரும் நிலையில், அவரின் இந்த 40 ஆண்டுகால திரைப்பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்...