துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதும் ஏறிய முதல் மேடை.. அதிர்ந்த அரங்கம்
#udhayanidhistalin #thanthitv
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.