“தன் உயிரை விட நண்பனே முக்கியம்“ - காப்பாற்ற ஓடிய இளைஞருக்கு நேர்ந்த சோகம் - சென்னையில் அதிர்ச்சி
திருப்பத்தூரை சேர்ந்தவர் சுவீத். இவர் பணி நிமித்தமாக சிங்கப்பூர் செல்ல இருந்த நிலையில், சுவீத்தை வழியனுப்ப அவருடன் நண்பர்கள் 4 பேர் சென்னை வந்துள்ளனர். ஐந்து பேரும் சென்னை விமானநிலையம் நோக்கி மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்த போது, சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஆசைத் தம்பி என்பவர் ரயிலில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், ரயில் நின்ற உடன் இறங்கி, ஆசைத் தம்பி விழுந்த இடத்தை நோக்கி தண்டவாளத்தில் ஓடியுள்ளனர். அப்போது, கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் ஒன்று கெளதம் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இதில், ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், காப்பாற்ற சென்ற அவரது நண்பர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.