'ஏழைகளின் ஊட்டி' ஏற்காட்டில் நேற்று ஏற்பட்டது நிலநடுக்கமா? - ஆட்சியர் சொன்ன தகவல்

Update: 2023-01-28 05:06 GMT

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.

ஏற்காட்டின் அனைத்து இடங்களிலும், காலை 11.15 மணிக்கு பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.

பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, விமானம் பறக்கும்போது இதுபோன்ற சத்தம் கேட்பது இயல்பானதுதான் என்று கூறியதுடன் ஏற்காட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதா என்று உறுதியாக கூறமுடியவில்லை என்று தெரிவித்தார்கள்.

உலகின் எந்த மூலையில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீஸ்மோகிராபி கருவியில் பதிவாகி விடும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த கருவி பழுதடைந்த பிறகும், அனைத்தும் கணினி மயமானாதால், அதில் நில அதிர்வு தொடர்பாக எதுவும் பதிவாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்