பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிபதி
விழுப்புரத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என, நீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டு, புகாரின்பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.