ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் பனியால் 160க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு கடும் பனிப்பொழிவு ஆப்கானிஸ்தானை வாட்டி வருகிறது. வீடுகளை கதகதப்பாக்க போதிய எரிபொருள் வாங்கும் வசதியின்றி அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். மரம் அல்லது நிலக்கரியை வாங்க வசதி இல்லாததால் எரிப்பதற்காக குப்பைகளில் பிளாஸ்டிக்குகளைத் தேடி பல குழந்தைகள் அலைந்தனர். உண்ண உணவு, குடிக்க குடிநீர் கூட இன்றி ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் வெப்ப நிலை மைனஸ் 34 டிகிரியைத் தொட்டுள்ளது. பெண்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் பல உதவிக் குழுக்கள் சமீபத்திய வாரங்களில் அதன் சேவைகளை ஆப்கானிஸ்தானில் இடைநிறுத்தியுள்ள நிலையில், மக்கள் உதவிகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.