'கணவர் காணவில்லை' என புகாரளித்த மனைவி.."2வது மனைவி பக்கம் இனி திரும்ப மாட்டேன்" Insta டான்ஸர் ரமேஷ்

Update: 2022-08-17 16:15 GMT

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷை காணவில்லை என அவரின் 2வது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரானது புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே தான் கடத்தப்படவில்லை என்றும், முதல் மனைவியுடன் இருப்பதாக கூறியிருக்கிறார் ரமேஷ். தன் மகளின் திருமணத்திற்காக வந்ததாகவும், இனி மனைவி மற்றும் மகளுடன் இருக்கப் போவதாக கூறி உள்ளார். 2வது மனைவி தன்னை துன்புறுத்து வந்ததாக குற்றச்சாட்டு முன்வைத்த ரமேஷ், இனி அவர்கள் பக்கமே திரும்ப போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்