சந்தேக டார்ச்சரால் சேர்ந்து வாழ மறுத்து மனைவி...வசியம் செய்வதற்காக மனைவியை கடத்திய கணவன்...
மயிலாடுதுறை
சந்தேகத்தால் பிரிந்து சென்ற மனைவி...
அடியாட்களை வைத்து கடத்திய கணவன்...
சந்தேக டார்ச்சரால் சேர்ந்து வாழ மறுத்து மனைவி...
வசியம் செய்வதற்காக மனைவியை கடத்திய கணவன்...
மயிலாடுதுறையில சொந்த கணவனே மனைவிய ஆள் வைச்சி கடத்திட்டுபோன வழக்குல போலீசார் அந்த பெண்ண மீட்டிருக்காங்க… கடத்தலுக்கு பின்னாடி இருக்க காரணம் என்ன?
காதல் மனைவியை சொந்த கணவனே காரில் கடத்திய சம்பவம்தான் கடந்த ஒருவாரமாக ஊடகத்தில் உலாவிக்கொண்டிருந்தது.
சைக்கோ கணவனால் கடத்தப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் தாய் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட உமாமகேஸ்வரி உயிருடன் இருக்கிறாரா இல்லையா? அந்த பெண்ணின் நிலை என்ன? இப்படி அடுத்தடுத்த கேள்விகளால் உமாமகேஸ்வரி கடத்தல் வழக்கு மர்மமாகவே இருந்து வந்தது. இந்தசூழலில்தான் கடத்தப்பட்ட உமாமகேஸ்வரியை அவரது கணவன் நடுரோட்டிலேயே இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
உமாமகேஸ்வரியை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவர் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கின் மர்ம முடிச்சிகளை அவிழ்த்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் 21 வயதாகும் உமாமகேஸ்வரி. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலைப்பார்த்து வந்துள்ளார். உமாமகேஸ்வரியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.
வேலைக் கிடைப்பதற்கு முன்பே தந்தையின் நண்பரான புதுக்கோட்டை மாவட்டம் பல்லவராயன்பத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரை உமாமகேஸ்வரி காதலித்து வந்துள்ளார். கிட்டதட்ட பதினெட்டு வயது வித்யாசத்தில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் திருமணம் செய்துகொண்டனர். மகளின் காதல் திருமணத்தில் உமாமகேஸ்வரியின் தாய்க்கு துளிகூட விருப்பமில்லை.
பிறகு கணவன் மனைவி இருவரும் உமாமகேஸ்வரி வேலைப்பார்க்கும் மயிலாடுதுறைக்கே குடியேறியிருக்கிறார்கள். அப்போதுதான் உமாமகேஸ்வரி வேலைக்கு செல்வது மாரிமுத்துவிற்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்து டார்ச்சர் செய்துவந்திருக்கிறார் மாரிமுத்து.
ஆடியோ (வணக்கம் வைக்க கூடாது என்று சொல்வது)
கணவனின் சந்தேகப்பிடியில் சிக்கிக்கொண்ட உமாமகேஸ்வரி திருமணமாக நான்கு மாதத்திலேயே கணவரை பிரிந்து தாய்வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதுதான் தன்னுடன் வாழ வரவில்லை என்றால் உமாமகேஸ்வரியை கொலை செய்துவிடுவதாக கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார் மாரிமுத்து.
ஆடியோ (கொலை செய்து விடுவதாக மிரட்டுவது)
ஒருகட்டத்தில் உமாமகேஸ்வரி கணவரைவிட்டு நிரந்தரமாக பிரிய நினைத்திருக்கிறார். இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மாரிமுத்து மனைவியை ஆள் வைத்து காரில் கடத்தியிருக்கிறார்.
மாமியார் தனலட்சுமி தன்னையும் மனைவியையும் பிரிப்பதற்காக உமாமகேஸ்வரிக்கு வசியம் வைத்ததாக நினைத்த மாரிமுத்து , மனைவிக்கு குளோரோபார்ம் கொடுத்து மயக்கமடைய செய்திருக்கிறார். பிறகு ராமநாதபுரம் அழைத்துச் சென்று மனைவியை தன்வசப்படுத்த தர்காவில் மாந்தரீக பூஜை செய்திருக்கிறார்.
ஆனாலும் உமாமகேஸ்வரி கணவருடன் வாழ மறுப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு கோடங்கி பூஜை என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற மாரிமுத்து ஒருகட்டத்தில் பூஜை பலனளிக்காததால் உமாமகேஸ்வரியை சென்னையிலுள்ள இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
உமாமகேஸ்வரி உடனே தன்னுடைய தாய் தனலட்சுமிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். சென்னைக்கு விரைந்த மயிலாடுதுறை காவல்துறையினர் உமாமகேஸ்வரியை பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மாரிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.