சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும்,
இதனால், நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.